கூந்தலால் மறைத்துக் கொண்டோம் - கதறும் நீட் மாணவிகள்

 
ன்

நீட் தேர்வு ரத்து செய்யப்பட  வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும்,  தொடர்ந்து நீட் தேர்வுக்கான கெடுபிடிகள் குறித்து அதிர்ச்சிகளும் ஒவ்வொரு நீட் தேர்வின் போதும் கூடிக் கொண்டே இருக்கிறது .

மாணவிகள் துப்பட்டா போட்டு வரக்கூடாது என்பது உட்பட பல்வேறு கெடுபிடிகளை செய்து வந்த நீட் தேர்வு குழுவினர் தற்போது மாணவிகள் பிரா  போடக்கூடாது என்றும் கெடுபிடி செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

ன்ன்

தனி அறையில் அழைத்துச் சென்று எல்லா மாணவிகளையும் பிராவை  கழட்டி தரச் சொல்லிவிட்டு தேர்வு எழுத அனுமதித்திருக்கிறார்கள்.  அப்போதே  மாணவிகள் கதறி அழுதிருக்கிறார்கள்.  பிரா கழட்டும்போது சால்வை இல்லாததால் கூந்தலால் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  பின்னர் தேர்வு எழுதிவிட்டு வந்த பின்னர் உடைமாற்ற சரியான அறை இல்லாமல், குவியலாக கிடந்த பிராக்களில் தங்கள்  பிரா எதுவென்று தேடுவதில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீட் நடத்தப்பட்டது.  கேரள மாநிலத்தில் கொல்லம்  அடுத்த ஆயூர் தேர்வு மையத்தில் நீட் நுழைவுத் தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.   தேர்வு மையத்தின் ஊழியர்கள் அங்கு தேர்வு எழுத சென்ற மாணவிகளை பரிசோதித்து இருக்கிறார்கள்.  

 அப்போது மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றுமாறு வற்புறுத்தி இருக்கிறார்கள்.   உள்ளாடையில் மெட்டல் டிடெக்டர் இருப்பது கண்டறியப்பட கழற்றச் சொல்லி இருக்கிறார்கள்.   ஒரு மாணவி கழற்ற மறுத்ததால் அவர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.   ஆனால் அந்த மாணவியை தனியறைக்கு அழைத்துச் சென்று அங்கு உள்ளாடைகளை கழட்டி சோதனை செய்திருக்கிறார்கள்.

ஏ

 அந்த தேர்வு மையத்தில் நடந்த சோதனை குறித்து ஒரு மாணவி கண்ணீருடன் தெரிவித்து இருக்கிறார்.   ’’எங்களை எல்லாம் ஸ்கேன் செய்து உடனே அனுப்பி விடுவார்கள் என்று நினைத்தோம்.  ஆனால் எங்களை இரண்டு வரிசையில் நிறுத்தி வைத்தார்கள் .  உலோக கொக்கிகள் ப்ரா போட்டவர்கள் ஒரு வரிசையாகவும்,   கொக்கிகள் இல்லாத பிரா அணிந்திருக்கும் மாணவிகள் இன்னொரு வரிசையிலும் நிறுத்தப்பட்டார்கள்.   என்னிடம் நீ எந்த பிரா போட்டு இருக்கிறாய் என்று கேட்டார்கள்.  அதைச் சொல்ல எனக்கு சங்கடமாக இருந்தது.   பின்பு அந்த வரிசையை பார்த்து நான் அணிந்திருந்த பிராவுக்கு ஏற்ப அந்த வரிசையில் நின்று கொண்டேன்.

 எங்களை எல்லாம் தனி அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.   எங்கள் பிராவை கழட்டச் சொன்னார்கள் .  மேஜையின் மீது கழற்றி வைக்கச் சொன்னார்கள்.  பின்னர் எல்லா பிராக்களையும் தொட்டு ஆய்வு செய்தார்கள்.    அப்போது சில பெண்கள் அவமானத்தால் கதறி அழுதார்கள்.   உடனே ஒரு பெண் போலீஸ்,  ஏன் அழுகிறாய் என்று அலட்சியமாக கேட்டார்.  

ஓ

 பிரா கழற்றும் போது சால்வை, துப்பட்டா என்று எதுவுமே இல்லாததால் கூந்தலால் மார்பகங்களை மறைத்துக் கொண்டோம்.   தேர்வு எழுதி முடித்துவிட்டு வந்து பார்த்தபோது எல்லா பிராக்களையும் குப்பைகள் போல குவித்து வைத்திருந்தார்கள் . அதில் அவரவர் பிராக்களை தேடி எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதில் சில பேர் தேட முடியாமல்  கண்ணீருடன் சென்று விட்டார்கள்’’ என்று வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார்.  

 இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது.   மாநில மனித உரிமை ஆணையத்தில் பலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.   இது குறித்து அறிக்கை வழங்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் ஊரக எஸ்பிக்கு உத்தரவிட்டிருக்கிறது.  மத்திய அரசு, மாநில அரசுக்கு இந்த புகார்கள் எடுத்துச் செல்லப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் இது குறித்து தெரிவித்திருக்கிறார்.

 இது குறித்து அறிக்கை தயார் செய்வதற்காகத்தான்  கொல்லம் ஊரக போலீசார் மாணவிகளிடம் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள்.  அதில் ஒரு மாணவி அளித்த வாக்குமூலம் தான் தற்போது வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தியிருக்கிறது.