காங்கிரஸுக்கு தொடர் பின்னடைவு.. கோவாவில் பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர்..

 
காங்கிரஸுக்கு தொடர் பின்னடைவு..   கோவாவில் பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர்..


கோவாவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 8 பேர் பாஜகவிற்கு தாவியதால், அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் கட்சி  பெரும் செல்வாக்குடன் இருந்த மாநிலங்களில் கோவாவும் ஒன்று.   ஆனால்  கோவாவில்  நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.   அம்மாநில முதல்வராக தற்போது  பிரமோத் சாவந்த் இருந்து வருகிறார்.   அதேநேரம்  கோவா காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உருவானது. அக்கட்சித்  தலைவர்கள் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி  மற்ற கட்சிகளில் இணைய தொடங்கிவிட்டனர்.  
 காங்கிரஸுக்கு தொடர் பின்னடைவு..   கோவாவில் பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர்..
கோவா காங்கிரஸில் 11 எம்.எல்.ஏக்கள் இருந்து வந்தனர்.  அவர்களை தக்க வைத்துக்கொள்வதில் அக்கட்சித் தலைமையும் முனைப்புடனே இருந்து வந்தனர்.   அந்த 11 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ,  கடவுள் முன்னிலையில் கட்சித் தாவல் செய்ய மாட்டம் என சத்தியம் செய்துகொடுத்தனர்.  ஆனால் அவை சிலகாலங்கள் மட்டுமே நிலைத்தன. அக்கட்சி மேலிடம் கூட்டிய கூட்டத்தை எம்.எல்.ஏக்கள் புறக்கணிக்கத் தொடங்கினர்.   மேலும் சில எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.  

காங்கிரஸுக்கு தொடர் பின்னடைவு..   கோவாவில் பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர்..

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான திகம்பர் காமத் தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, ராஜேஷ் பால்தேசாய், கேதார் நாயக் சங்கல்ப் அமோன்கர், அலிகசோ செகவேரா, ருடாலப் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 8 பேர் காங்கிரஸிலிருந்து விலகி, பா.ஜ.க-வில் இணைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  எம்.எல்.ஏக்களுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் இதனை உறுதி படுத்தினார்.  மேலும், பாரத் ஜோடோ யாத்ரா போல்,  கோவாவில் காங்கிரஸிலிருந்து வெளியேறும் யாத்ரா தொடங்கியிருப்பதாக கூறினார்.