நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் இன்று போராட்டம்!
Fri, 5 Aug 20221659665477521

நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.
நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் , இடதுசாரிகள் என எதிர்க் கட்சியினர் தொடர் அமலில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் அமலில் ஈடுபட்ட காரணத்திற்காக 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் என்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி செல்லவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் இன்று பிரதமர் இல்ல முற்றுகையிடப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.