கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்.. காங்கிரஸ்

 
காங்கிரஸ்

எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கர்நாடக காங்கிரஸ் நேற்று மாநிலம் முழுவதும் பிரஜா தவ்னி யாத்ரா என்ற பேருந்து யாத்திரை நேற்று தொடங்கியது. பா.ஜ.க. அரசின் ஊழலை வெளிப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் பொய்களை அம்பலப்படுத்தவும் இந்த பேருந்து பயணத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. காங்கிரஸின் இந்த பேருந்து பயணத்தின்போது, காங்கிரஸ் கட்சி யாரும் எதிர்பாராத வண்ணம், தனது முதல் தேர்தல் வாக்குறுதியை அளித்தது. 

 மின்சாரம்

தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று  காங்கிரஸ்  வாக்குறுதி அளித்துள்ளது. இந்த வாக்குறுதியை க்ருஹ ஜோதி யோஜனா என்று காங்கிரஸ் பெயரிட்டுள்ளது. விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராட கன்னடர்களுக்கு உதவவும், உணவு, குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்காக சேமிக்கவும், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாங்கம் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கும்.

4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகள் நிலவும் சூழ்நிலையில், மக்கள் நலன் மற்றும் நல்வாழ்வை பற்றி சிந்திக்கும் அரசு கர்நாடகாவுக்கு தகுதியானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.