ராஜஸ்தானில் தலைமை மாற்றம் செய்வது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்க வேண்டும்.. காங்கிரஸின் சச்சின் பைலட்

 
சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது…. பதவி பறிப்பு குறித்து சச்சின் பைலட்

ராஜஸ்தானில் தலைமை (முதல்வர்) மாற்றம் செய்வது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்க வேண்டும் என்று காங்கிரஸின் இளம் தலைவர் சச்சின் பைலட் பேசியிருப்பது அந்த கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், ராஜஸ்தானில் தலைமை (முதல்வர்) மாற்றம் செய்வது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் காங்கிரஸின் இளம் தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ்

சச்சின் பைலட் பேட்டி ஒன்றில் கூறியதாவது: ராஜஸ்தானில் தலைமை (முதல்வர்) மாற்றம் செய்வது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்க வேண்டும். கடந்த ஆண்டு செப்டம்பரில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டத்தை அனுமதிக்காத தலைவர்கள் விவகாரம் கட்சியின் மேலிடத்துக்கு தெரியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி முடிவு செய்ய வேண்டும். மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. ராஜஸ்தானில் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

பணமதிப்பிழப்பு

தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் ராஜஸ்தானில் ஆட்சியை மீண்டும் தொடர முடியும். ராஜஸ்தானில் ஆட்சி நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நான் பேசியுள்ளேன். பேப்பர் கசிவு  வழக்கில் மூளையாக செயல்பட்ட பெரிய மீன்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களையும்  பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமையன்று சச்சின் பைலட் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. உண்மையில் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மூலம் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது என தெரிவித்தார்.