ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் காங். எம்.பி., உயிரிழப்பு!

 
tn

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை  பயணத்தில்  பங்கேற்ற எம்.பி. சந்தோக் சிங் சவுத்ரி உயிரிழந்தார். இன்று காலை பஞ்சாப் லூதியானாவில் நடைபெற்ற யாத்திரையில் பங்கேற்றபோது அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி.சந்தோக் சிங் சவுத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

tn

பஞ்சாப் பில்லூர் பகுதியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்ற  நிலையில் இந்த எதிர்பாராத துயர சம்பவம் நடந்துள்ளது. இதன் காரணமாக ஒற்றுமைப் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.  சந்தோக் சிங் சவுத்ரி பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதி எம்பி ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

tn

சந்தோக் சிங் சவுத்ரி எம்.பியின் அகால மரணம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுக்குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது மறைந்த ஜலந்தர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சந்தோக் சிங் சவுத்ரி அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுவும் ஒரு வீரமரணம்தான். நீங்கள் என்றென்றும் நினைவுகூறப்படுவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.