குஜராத்தில் போதை பொருள் மாபியாக்களை பாதுகாப்பது யார்? - ராகுல் காந்தி கேள்வி

 
rahul

குஜராத் மாநிலத்தில் போதை பொருள் விற்கும் மாபியாக்களை எந்த சக்தி பாதுகாக்கிறது? என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  

குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் கள்ளச்சாராய மோகம் அதிகரித்துள்ளது.  இந்த சூழலில் அகமதாபாத், போட்டட் மாவட்டங்களில் கள்ள சாராயம் அருந்திய பலர் கடந்த 25ம் தேதி மயங்கி விழுந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  அத்துடன் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 42 ஆக உயர்ந்துள்ளது.  இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த சம்பவம் தொடர்பாக கள்ள சாராயம்  தயாரிக்க தேவையான ரசாயனத்தை கொடுத்தவர், கள்ள சாராயத்தை விற்றவர் ஆகியோர் உட்பட 5  பேரை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர். இதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக பொடாட் மற்றும் அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் மற்றும் 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

gujarat

இந்நிலையில் கள்ளச் சாராயம் அருந்தி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, குஜராத்தில் பல பில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள்களும் தொடர்ந்து மீட்கப்படுவதாகவும், போதைப் பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள மாபியாக்களுக்கு எந்த ஆளும் சக்தி பாதுகாப்பு கொடுக்கிறது எனவும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் வாழ்ந்த இந்த பூமியில் இது கவலையளிக்கும் விஷயம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.