எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட்டோம், நீங்கள் பிரதமரிடம் போய் கேளுங்கள்.. ஜெய்ராம் ரமேஷ் ஆவேசம்

 
புதிய சட்டப்பேரவை கட்டுமான பணிகளை நிறுத்திய சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு.. மோடியை தாக்கிய ஜெய்ராம் ரமேஷ்

சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து திக்விஜய சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரிடம், எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட்டோம், நீங்கள் பிரதமரிடம் போய் கேளுங்கள் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான திக்விஜய சிங் நேற்று ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொண்டார். ஜெய்ராம் ரமேஷுடன் திக்விஜய சிங் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் திக்விஜய சிங்கிடம், நேற்று முன்தினம் அவர் சர்ஜிக்கல் ஸ்டிரைக்  குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக அவரிடம் கேட்டார். அதற்கு திக்விஜய சிங், ஆயுதப் படைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாக  தெரிவித்தார்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்

இதனையடுத்து அந்த செய்தியாளர் ஜெய்ராம் ரமேஷிடம், திக்விஜய சிங்கின் அறிக்கை குறித்து கேட்டார். உடனே ஜெய்ராம் ரமேஷ் அந்த  செய்தியாளரை நிறுத்தி, இந்த விஷயத்தில் கட்சி ஏற்கனவே பேசி விட்டது. எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட்டோம். நீங்கள் பிரதமரிடம் போய் கேளுங்கள் என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில், புல்வாமாவில் நமது சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். சி.ஆர்.பி.எப். அதிகாரிகள், வீரர்களை விமானம் மூலம் அனுப்ப  வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பிரதமர் மோடி ஏற்கவில்லை. 

2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிரானது.. திக்விஜய சிங்

எப்படி இப்படி ஒரு குளறுபடி ஏற்பட்டது?. இன்று வரை புல்வாமா தாக்குதல் தொடர்பான எந்த அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) கூறினர். ஆனால் அதற்கான ஆதாரம் காட்டவில்லை. அவர்கள் பொய்களை மட்டுமே பரப்புகிறார்கள் என தெரிவித்தார். ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு திக்விஜய சிங் ஆதாரம் கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.