மடாதிபதி சிவமூர்த்தி மீது 2 மாணவிகள் சொன்ன வாக்குமூலம் -ரகசியமாக பதிவு

 
gg

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பிரபல மடங்களில் ஒன்று  முருக மடம்.    சித்ரதுர்காவில் இருக்கும்  இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூா்த்தி முருகா சரணரு.    முருக மடத்தின் சார்பில் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்த பள்ளியில் தங்கி படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேரை மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு,  கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

s

 பாதிக்கப்பட்ட அந்த மாணவிகள் மைசூரில் இருக்கும் சமூக சேவை அமைப்பில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.  இதன் பின்னர் அந்த அமைப்பினர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு இருக்கிறார்கள்.   மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமையை குறித்து அந்த அமைப்பினர் விளக்கி சொல்லி இருக்கிறார்கள். இந்த புகாரின் படி குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி இது குறித்து மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மடாதிபதிக்கு உடந்தையாக இருந்த சித்தர துர்காவில் இருக்கும் அக்கமா தேவி வஸ்தி நிலையத்தில் வார்டன் ரஷ்மி,  பசவதித்தியா, பரமசிவன், கங்காதரைய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

m

 இதை அடுத்து பாதிக்கப்பட்ட அந்த இரண்டு மாணவிகளையும் போலீசார் மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த பாலியல் வழக்கை மைசூர் நஜர்பாத் போலீசார் சித்ரதுர்கா போலீசுக்கு மாற்றி இருக்கிறார்கள். 

 சித்ரதுர்கா போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
 
மடாதிபதி சிவமூர்த்தி போலீசாரின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறார்.   சிவமூர்த்தி மீது பாலியல் புகார் சொன்ன இரண்டு மாணவிகள், சித்ரதுர்கா முதலாவது ஜுடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்களது வாக்குமூலம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையில்,   பாலியல் புகாரில் சிக்கி இருக்கும் மடாதிபதியை கைது செய்யக்கோரி தலித் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.   

கனகபுரா மும்முடி சித்தேஸ்வரா மடத்தின் மடாதிபதி தலைமையில் பல்வேறு மடங்களை சேர்ந்த மடாதிபதிகள்  சிவமூர்த்தியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மடாதிபதி முருகா சரணரு மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.  விரைவில் உண்மைகளை வெளிவரும் என்கிறார்கள்.