தனது சொந்த வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாதவர் நிதிஷ் குமார்.. சிராக் பஸ்வான் தாக்கு

 
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

எனது தந்தை ராம் விலாஸ் பஸ்வான் மரணத்திற்கு பிறகு அவரை பற்றி தனிப்பட்ட கருத்துக்களை முதல்வர் கூறுவது தவறானது என்றும், தனது சொந்த வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாதவர் நிதிஷ் குமார் என்று சிராக் பஸ்வான் தெரிவித்தார்.

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், லோக் ஜன்சக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வானின் இரண்டாவது திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து இருந்தார். மேலும், ராம் விலாஸ் பஸ்வானின் இரண்டாவது மனைவியின் மகனும், எம்.பி.யுமான சிராக் பஸ்வானை குழந்தை என்றும் விமர்சனம் செய்து இருந்தார்.

மக்களின் உயிரை காக்கத்தான் இப்பம் முன்னுரிமை… பீகார் தேர்தலை நடத்த வேண்டாம்.. பஸ்வான் கட்சி கடிதம்

மறைந்த தனது தந்தையின் இரண்டாவது திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிதிஷ் குமாருக்கு சிராக் பஸ்வான் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிராக் பஸ்வான் கூறியதாவது: எனது தந்தையின் (ராம் விலாஸ் பஸ்வான்) மரணத்திற்கு பிறகு அவரை பற்றி தனிப்பட்ட கருத்துக்களை முதல்வர் (நிதிஷ் குமார்) கூறுவது தவறானது. இந்த நிலைக்கு ஒரு போதும் தாழ்ந்ததில்லை. 

ராம் விலாஸ் பஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை…. அவசியம் என்றால் மேலும் ஒரு அறுவை சிகிச்சை.. சிராக் பஸ்வான் தகவல்

தனது சொந்த வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிதிஷ் குமாரை பற்றி நான் ஒரு போதும் பேசவில்லை. மறைந்த எனது தந்தை ஒரு திறந்த புத்தகம் போன்றவர். கடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இந்த குழந்தை தான் (சிராக் பஸ்வான்) உங்களை மண்ணை கவ்வ வைத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.