நடிகை ரியா மீது குற்றப்பத்திரிகை! 10 ஆண்டு சிறை?

 
r

நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.  குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின்  வாழ்க்கை வரலாற்றை  படமான எம். எஸ். தோனி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர் ஆனார் சுஷாந்த் சிங்.   இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   அவரது தற்கொலை தொடர்பாக சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி ,  அவரது சகோதரர் சௌமி சக்கரவர்த்தி உள்ளிட்ட 35 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு அமைப்பு தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது.

su

 இது குறித்து போதைப்பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி  ரியா சக்ரபோர்த்தி போதை மருந்தை சுதா சுஷாந்த் சிங்குக்கு சப்ளை செய்து வந்திருக்கிறார். போதை மருந்துக் காண தொகையை ரியாத் தந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.  அவற்றின் அடிப்படையில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது என்கிறார் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சேர்ந்த அதிகாரி ஒருவர். 

ரியா சக்ரபோர்த்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பத்தாண்டுகள் சிறையில் தண்டனை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது .  ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை ரியா மறுத்திருக்கிறார்.    அதே நேரம் சுஷாந்த் சிங்  போதை மருந்து பயன்படுத்துவார் என்று அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார்.  

சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரியா ஒரு மாத சிறை தண்டனை பெற்று  கேட்கும் ஜாமினில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.