ரூ.30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை திறந்தவெளி சந்தை விற்பனை செய்ய அனுமதி

 
Centre approves sale of 30 lakh MT wheat in open market

ரூ. 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின்கீழ் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Grains - Wheat Exporter from Rajkot

நாட்டில் அதிகரித்து வரும் கோதுமை விலையேற்றத்தை கருத்தில் கொண்டு 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின்கீழ் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இந்திய உணவுக்கழகம் இந்த 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை மத்திய சேமிப்புக் கிடங்கில் இருந்து பெற்று, உள்நாட்டு திறந்தவெளி சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் விற்பனை செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, மாவு ஆலைகள், கோதுமை மொத்த வியாபாரிகள் ஆகியோருக்கு இ-ஏலம் மூலம் அதிகபட்சமாக 3 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமைகள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.