இந்தியாவில் குரங்கு அம்மை நோய் இதுவரை கண்டறியப்படவில்லை - மத்திய சுகாதாரத்துறை

 
Health Minister mansuk Health Minister mansuk

இந்தியாவில் குரங்கு அம்மை நோய் இதுவரை கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958ம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னாலில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு தான் முதன் முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. மனிதர்களிடையே பரவிய சின்னம்மை, பெரியம்மை நோயை போல குரங்குகளிடம் பரவிய அம்மை நோய் மனிதர்களிடையே பரவுவதையே குரங்கு அம்மை நோய் என அழைக்கின்றன. வழக்கமாக மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோயாகிய இந்த குரங்கு அம்மை நோய், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் பரவி வருவதன் காரணம் குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டது. இதுவரை 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரங்கம்மை நோய் சமூகப் பரவலாக மாறும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல என்றாலும்,  சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

monkeypox

இந்நிலியில், இந்தியாவில் குரங்கு அம்மை நோய் இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  குரங்கு அம்மை நோய் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும், வெளிநாடுகள் மற்றும் குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.