நெல், அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி - மத்திய அரசு அதிரடி

 
rice

நாட்டின் நெல், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவீதம் வரி விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அரிசி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதம் ஆகும். இந்தியாவில் நடப்பாண்டில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 367.55 லட்சம் ஹெக்டேர் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் 2022-23- ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி கணிசமாக பாதிக்கும் என கூறப்பட்டது.

Rice Export

இந்த நிலையில், நாட்டின் நெல், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவீதம் வரி விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நெல் மற்றும் அரிசி ஏற்றுமதி குறித்த புதிய அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சில குறிப்பிட்ட ரக அரிசிகளுக்கு மட்டும் 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் நடப்பாண்டில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவீதம் குறைந்துள்ளதாகவும், 367.55 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த நிலையில், வரி விதிப்பு காரணமாக அரிசி உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே சந்தைகளில் அரிசி விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக கடுமையாக உயர்ந்தது.