மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை பெற முடியும்.. எப்படி தெரியுமா??

 
மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை பெற முடியும்.. எப்படி தெரியுமா??

மத்திய அரசு ஊழியர்கள்  பழைய ஓய்வூதிய திட்டப் பலன்களை பெற முடியும்.  அது எவ்வாறு என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம்..  

2003-ஆம் ஆண்டு டிசம்பரில் பாஜக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  அதன்படி இந்த புதிய ஓய்வூதிய திட்டமானது  கடந்த 2004 ஆம் ஆண்டு  ஏப்ரல் 1ம் தேதி  முதல்  அமலுக்கு வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் ( Old Pension Scheme - OPS) ஓய்வூதியம் சார்ந்த திட்டமாக இருக்கும் நிலையில்,  புதிய ஓய்வூதியத் திட்டமான  National Pension System (NPS) என்பது முதலீட்டு மற்றும் ஓய்வூதிய திட்டமாகும்.

மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை பெற முடியும்.. எப்படி தெரியுமா??

பணி ஓய்வுக்குப் பிறகு மாந்தாந்திர நிலையான வருமானம் அளித்து வந்த பழைய  ஓய்வூதியத் திட்டத்தை மாற்றப்பட்டது  மத்திய  அரசு ஊழியர்களிடையே  கடும்  அதிருப்தியை ஏற்படுத்தியது.  இந்நிலையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களும் கூட,  சில நிலைமைகளின் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டப் பலன்களைப் பெற முடியும் என்பது  பலருக்கும் தெரிவதில்லை.

 பணியில் இருக்கும் போது NPS-ன் கீழ் உள்ள அரசு ஊழியர் மரணம் அடைந்தாலோ,  அல்லது அவரால் செயல்பட முடியாத அளவிற்கு உடல்நிலை மோசமடைந்தாலோ ஊனம் ஏற்பட்டாலோ , சர்வீஸிலிருந்து வெளியேற்றப்பட்டாலோ   அவரது குடும்பத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தின் (OPS) கீழ் பலன்களை பெற முடியும். இதற்கு  மத்திய குடிமைப் பணிகள் விதிகள், 2021ன் கீழ் ஒரு விருப்பம் உள்ளது என ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.  மேலும் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை பெற முடியும்.. எப்படி தெரியுமா??

“படிவம் 1:

மத்திய சிவில் சர்வீசஸ் விதிகள், 2021 இன் விதி 10-ன் படி, NPS-ன் கீழ் உள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும், அரசுப் பணியில் சேரும் போது, ​​NPS-ன் கீழ் பலன்களைப் பெற Form 1-ல் விருப்பத்தை பயன்படுத்த வேண்டும் அல்லது மத்திய சிவில் சேவை (ஓய்வூதியம்) விதிகள் அல்லது மத்திய சிவில் சேவை (அசாதாரண ஓய்வூதியம்) விதிகளின் கீழ் அவர் இறந்தால் அல்லது ஊனமுற்றதன் காரணமாக அல்லது செல்லாததால் ஓய்வு பெற்றதன் காரணமாக பணியிலிருந்து வெளியேறும் போது பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே பணியில் உள்ள மற்றும் NPS-ன் கீழ் உள்ள அரசு ஊழியர்களும் இத்தகைய விருப்பத்தைப் பயன்படுத்தலாம் என அறிவிப்பு கூறுகிறது.

படிவம் 2: ஒவ்வொரு அரசு ஊழியரும் குடும்பத்தின் விவரங்களை படிவம் 2-ல் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உயரதிகாரி அரசு ஊழியரிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து தகவல் தொடர்புகளையும் ஒப்புக்கொண்டு, எதிர் கையொப்பமிட்டு, சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் சர்விஸ் புக்கில் ஒட்ட வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை பெற முடியும்.. எப்படி தெரியுமா??

இந்த ஆப்ஷனை ஊழியர்கள் தங்களின் ஓய்வுக்கு முன் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தி கொள்ளலாம் என்று DoPPW தெரிவித்துள்ளது. எதிர்பாராதவிதமாக பணியை தொடர முடியாத ஊழியர் புதிய ஆப்ஷனை சமர்ப்பிக்கும் விருப்பத்தை பெறுவார்கள். சர்விஸின் போது ஊழியர் இறந்தால், இறப்பதற்கு முன் அவர் கடைசியாகப் பயன்படுத்திய ஆப்ஷன இறுதியானது, ஆப்ஷனை திருத்த குடும்பத்தினருக்கு உரிமை இல்லை.

ஒருவேளை  ஊழியர் 15 வருட சேவையை முடிப்பதற்கு முன்பாகவோ அல்லது  விதிகள் 2021-ன் அறிவிப்பின் 3 ஆண்டுகளுக்குள் ஆப்ஷனை பயன்படுத்தாமல் இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு மத்திய சிவில் சர்வீசஸ் விதிகளின் அடிப்படையில்  ஊழியர் தேர்ந்தெடுத்திருக்கும் ஆப்ஷனின் படி குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஊழியரால் எந்த விருப்பமும் பயன்படுத்தப்படாத நிலையில், சேவையிலிருந்து விடுவிப்பதற்கான உரிமைகோரல் அல்லது சந்தாதாரரின் மரணம் குறித்த குடும்பத்தின் கோரிக்கையானது இயல்புநிலை விருப்பமாக (default option ) கருதப்பட்டு PFRDA விதிமுறைகள் 2015ல் கட்டுப்படுத்தப்படும்.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.