செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு - ரெட்மி நிறுவனம் விசாரணை

 
m

ஸ்மார்ட் போன் வெடித்து பெண் இறந்து விட்டதாகவும்,  இது குறித்து ரெட்மி மொபைல் போன் நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.  டெல்லியில் என்.சி.ஆர்.  நகரில் வசித்து வந்த பெண் செல்போன் வெடித்து இறந்த தகவல் இணையங்களில் பரபரபாக பரவி வருகிறது.

tl

 பிரபல யூடியூபர்  ஒருவர் தனது ட்விட்டர் பதிவில்,  ஸ்மார்ட்போன் வெடித்து தூங்கிக் கொண்டிருந்த தனது அத்தை இறந்து விட்டதாக பதிவிட்டு இருக்கிறார் .  ரெட்மி 6ஏ செல்போனை தலையணைக்கு அருகில் முகத்திற்கு நேராக வைத்துக் கொண்டு தூங்கி இருந்திருக்கிறார் அந்த பெண்.   திடீரென்று அந்த போன் வெடித்து தனது அத்தையின் உயிரை பறித்து இருக்கிறது என்று அந்த யூடியூபர் தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

யூடியூபரின் இந்த பதிவுக்கு ரெட்மி நிறுவனம் பதில் அளித்து இருக்கிறது.   இது குறித்து விசாரித்து வருவதாக அந்த யூடியூபர் அந்த ஸ்மார்ட் போன் தற்போதைய நிலை குறித்த படங்களையும் டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.   முன்பக்க பேனல் முழுவதுமாக குப்பையில் போடப்பட்ட நிலையில் பின் பேனல் ஸ்மார்ட் போன் பேட்டரி வெடித்திருக்கிறது .

அந்த டிவிட்டரில்  உயிரிழந்த அந்த பெண்ணின் படமும் உள்ளது.   அதில் அவர் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்.   அந்த டுவிட்டரில்,    வணக்கம் நேற்று இரவு என் அத்தை இறந்து கிடந்தார்.   அவர்  ரெட்மி 6ஏ என்ற ஸ்மார்ட்போனை பயன்படுத்தினார்.   அவர் தூங்குவதற்கு முன்பு தலையணை பக்க முகத்தின் அருகே போனை வைத்திருந்தார்.   சிறிது நேரத்தில் அவருடைய செல்போன் வெடித்தது .   இதற்கு அந்த செல்போன் நிறுவனமே பொறுப்பு என்று பதிவிட்டு இருக்கிறார்.  

 இந்த சம்பவம்  பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.