கார் -பேருந்து நேருக்கு நேர் மோதல் : 11 பேர் உடல் நசுங்கி பலி

 
அச்

பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.  மத்திய பிரதேச மாநிலத்தில் பெதில் அருகே இந்த கோர விபத்து நடந்திருக்கிறது.

 மத்திய பிரதேச மாநிலத்தில் போபால் மாவட்டத்தில் இருக்கும் பெதுல் எனும் இடத்தில் அதிகாலையில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கின்றன.   இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

ச

 விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று 11 பேர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.  மேலும்,  காயம் அடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.  

11 தொழிலாளர்கள்  மராட்டியத்தின் அமராவதியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது குட்கான் மற்றும் பைஸ்தேஹி இடையே ஜல்லார் காவல் நிலையம் அருகே அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 2:00 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக பெதில் உயர்காவல் அதிகாரி சிம்லா பிரசாத் கூறியிருக்கிறார்.  சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.