பொறுத்துக்கொள்ள முடியல... ராம்தேவ் பேச்சால் மோடி, அமித்ஷாவிடம் குமுறல்

 
ba

மீண்டும் அவதூறு பேசி இருக்கிறார்.  அலோபதி மருத்துவம்,  தடுப்பு ஊசி குறித்து பொறுப்பற்ற முறையில் ராம்தேவ் பேசியிருக்கிறார்.   இந்திய ஆராய்ச்சி, கடின உழைப்பு, நவீன மருத்துவம் பற்றி மரியாதை குறைவான போக்கு ஏற்றுக் கொள்ள முடியாது பொறுத்துக் கொள்ள முடியாது என்றும்,  அதனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்திற்கு இதை கனிவுடன் கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்துள்ள ரெசிடென்ட் டாக்டர்ஸ் அசோசியேசன் கூட்டமைப்பு ,  இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

br
 
யோகா குரு பாபா ராம்தேவ் ஹரித்துவாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.   அப்போது அமெரிக்க அதிபர் ஏற்கனவே இரு தடுப்பூசிகள் செலுத்திய பின்னரும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று எப்படி ஏற்பட்டது? என்பது குறித்த கேள்விக்கு,    யோகா , ஆயுர்வேதாவின் துணை இல்லாமல் எந்தவித தடுப்பூசியாலும் நோய் எதிர்ப்பு சக்தியை கொரோனா வைரஸுக்கு எதிராக நிரந்தரமாக வழங்க முடியாது என்றார்.

 அவர் மேலும் அது குறித்து,  எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அதிபராக இருந்தாலும் கூட மிகப் பெரிய மருத்துவராக இருந்தாலும் கூட இதுதான் நிலைமை . உலக சுகாதார அமைப்பில் இருக்கும் உயர்ந்த அதிகாரிகள் கூட கொரோனா தடுப்பு ஊசி செலுத்திய வின்னர் மீண்டும் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள் . இந்த உலகம்  மருத்துவ அறிவியலால் தடுப்பூசி என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறது.  ஆனால் இந்த உலகம் யோகா ஆயுர்வேதாவுக்கு மீண்டும் திரும்பும்.  மக்கள் துளசியை வளர்ப்பார்கள்,  கற்றாழையை தோட்டத்தில் வளர்ப்பார்கள்,  தங்களின்  உடல் நலத்தை பெறுவார்கள் என்றார். 

ma

ராம்தேவின் இந்த பேச்சு அலோபதி மருத்துவ உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி  ஏற்படுத்தி இருக்கிறது.    அலோபதி மருத்துவம் குறித்து ஆதாரமற்ற பேச்சுக்களை பேசுவது மக்கள் மீதான நம்பிக்கையை இழக்கும் என்று மருத்துவ கூட்டமைப்புகள்  கண்டனம் தெரிவித்து வருகின்றன.   

இதுகுறித்து ரெசிடென்ட் டாக்டர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில்,  ‘’ராம்தேவ் மீண்டும் அவதூறு பேசி இருக்கிறார்.  அலோபதி மருத்துவம்,  தடுப்பு ஊசி குறித்து பொறுப்பற்ற முறையில் அவர் பேசியிருக்கிறார்.   இந்திய ஆராய்ச்சி, கடின உழைப்பு, நவீன மருத்துவம் பற்றி மரியாதை குறைவான போக்கு ஏற்றுக் கொள்ள முடியாது பொறுத்துக் கொள்ள முடியாது .  அதனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்திற்கு இதை கனிவுடன் கொண்டு வருகிறோம்.   இது குறித்து  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’ என்று ரெசிடென்ட் டாக்டர்ஸ் அசோசியேசன் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.