குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து 30 பேர் பலி

 
Cable bridge collapses in Gujarat,

குஜராத் மாநிலம் மோர்பி எனும் இடத்தில் பாலம் உடைந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 400க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Newly-renovated cable bridge collapses in Gujarat, several dead; PM  announces ex-gratia | India News


வரலாற்று சிறப்புமிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கேபிள் பாலம் மோர்பி பகுதியில் உள்ளது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்ததை அடுத்து, கடந்த 26 ஆம் தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் வாரவிடுமுறையை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்டோர் பாலத்தில் திரண்டிருந்தனர். 

அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார். உள்ளூர்வாசிகளுடன் இணைந்து மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.