ராகுல் காந்தி தான் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுகிறார் - காங்கிரஸ் கட்சிக்கு துணை ராணுவம் பதில்

 
jodo yatra

ராகுல் காந்தியின் பாதுகப்பில் எந்த குறைபாடும் இல்லை எனவும், ராகுல் காந்தி தான் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுகிறார் எனவும் காங்கிரஸ் கட்சிக்கு துணை ராணுவம் பதிலளித்துள்ளது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி  பாரத் ஜோடோ யாத்திரை எனப்படும் இந்திய ஒற்றுமைக்கான நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம்  கடந்த 24ம் தேதி டெல்லியை சென்றடைந்தது. 9 மாநிலங்களை கடந்த ஒற்றுமை நடைபயணத்தின் போது , காவல்துறை பாதுகாப்பு முழுமையாக வழங்கப்பட்டிருந்தது.   ஆனால்  கடந்த 24ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் தொண்டர்களே மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி நடைபயணத்தை முறையாக நடத்திச் சென்றனர். இந்நிலையில் ராகுல் காந்தியின் பாத யாத்திரைக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என காரங்கிரஸ் கட்சி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.   
 
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு துணை ராணுவம் பதில் அளித்துள்ளது. துணை ராணுவம் காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ள பதிலில், ராகுல் காந்தியின் பாதுகப்பில் எந்த குறைபாடும் இல்லை. ராகுல் காந்தி பல சந்தர்ப்பங்க்ளில் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியுள்ளார். இது தொடர்பாக அவ்வப்போது ராகுல் காந்தி தரப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.