ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் முதல்வர் மீது பகிரங்க ஊழல் புகார்!!

 
ttn

முதல்வர் ரங்கசாமியை நீக்க வேண்டும் என்று பாஜக ஆதரவு சுயேட்சை  எம்எல்ஏ அங்காளன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

rangasamy

புதுச்சேரி அரசுக்கு ஆதரவளிக்கும் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றம் எதிரே புதுச்சேரியில் நடைபெறும் பாஜக என்ஆர் காங்கிரஸ் அரசுக்கு சுயச்சை உறுப்பினராக அங்கம் ஆதரவு அளித்து வருகிறார் திருபுவனை தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற இவர் தனது தொகுதிக்கு அடிப்படை பணிகளை அரசு செய்யத வருவதாகவும் மக்கள் நலத்திட்டங்கள் தனது தொகுதியில் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி சட்டமன்றம் எதிரே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார். போராட்டத்தின்போது பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு  பேட்டியளித்த அவர், முதலமைச்சர் தனது தொகுதியை முழுமையாக புறக்கணிக்கிறார். தான் பாஜகவிற்கு ஆதரவளிப்பதால் முதலமைச்சர் தான் பரிந்துரை செய்யும் எந்த ஒரு பணிகளையும் ஏற்காமல் இருக்கிறார். மேலும் தன்னுடைய தொகுதியில் எந்த பணியும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

rangasamy

 புதுச்சேரி ஆட்சியில் வெளிப்படையான தன்மை இல்லை. ஊழல் மலிந்துவிட்டது. முதலமைச்சர் ரங்கசாமி மதுபான தொழிற்சாலையில் வழங்குவதில் பல முறைகேடுகளை கையாள்கிறார். பாஜகவின் பணம் தேவை, பாஜகவின் ஆளுநர் தேவை என கூறும் முதலமைச்சர் பாஜகவில் ஒரு எம்எல்ஏ கூட வளரக்கூடாது.. புதுச்சேரியில் பாஜக கட்சி வளரகூடாது என நினைக்கிறார். இதனால் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு முதலமைச்சர் ரங்கசாமி பதவியில் இருந்து தூக்க வேண்டும். ரங்கசாமி பதவியில் இருக்கும் வரை தனது போராட்டம் ஓயாது என அவர் கூறியுள்ளார்.