அரசியல் துறவறம் செல்ல வேண்டிய சூழ்நிலை சித்தராமையாவுக்கு வரும்... பசவராஜ் பொம்மை

 
மேகதாது அணை- தமிழகத்தில் மேல்முறையீட்டை சந்திக்க தயார்: பசவராஜ் பொம்மாய்

அரசியல் துறவறம் செல்ல வேண்டிய சூழ்நிலை சித்தராமையாவுக்கு வரும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் மே மாதத்துக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளபோதிலும், காங்கிரஸ் கட்சி, வீடுகளுக்கு இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் என்று தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு கடும்  போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் காங்கிரஸால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று பா.ஜ.க. தெரிவித்தது.

சித்தராமையா

இதனையடுத்து, வீடுகளுக்கு இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2  போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் தலைமையிலான அரசு நிறைவேற்ற தவறினால் அரசியல் சன்யாசம் எடுப்பேன் என்று சித்தராமையா பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்தார். சித்தராமையாவின் கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு கர்நாடக முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பசவராஜ் பொம்மை கூறியதாவது: அவருக்கு அந்த சூழ்நிலை (அரசியல் துறவறம்) வரும். சித்தராமையா முதல்வராக பணியாற்றியவர், அவருக்கு மின்சா விநியோக நிறுவனங்கள் நிலை பற்றி தெரியும். பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்தபிறகு ரூ.8 ஆயிரம் கோடியை அந்நிறுவனங்களுக்கு கொடுத்து விட்டு, ரூ.13 ஆயிரம் கோடியை வங்கிகளில் கடனாக பெறுவதற்கு உத்தரவாதமாக வழங்கியது. இதனால் மின் விநியோக நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டது. இதனால் தான் மின்விநியோகம் பாதிக்கப்படவில்லை. 

மோடி

தற்போதைய சூழ்நிலையில், அதை (இலவச மின்சாரம்) செயல்படுத்த முடியாது. ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்த விரக்தியில் காங்கிரஸ் கட்சி இது போன்ற வாக்குறுதியை அளிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஏதாவது வாக்குறுதி அளித்து  மற்றதைச் செய்வதில் பெயர் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு சித்தராமையா பேசியதால் எதுவும் நடக்காது. குஜராத் தேர்தலின்போது இதே போன்ற மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்னும் எவ்வளவு பேசினால் அவர்கள் (காங்கிரஸ்) பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்களா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.