வட மாநிலங்களில் கட்டிடங்கள் குலுங்கின - அந்த திக் திக் அனுபவங்கள்

 
ee

 நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது.  இந்தியாவில் வட மாநிலங்களில்,  டெல்லியிலும் நள்ளிரவில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

eq

 நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  இந்த நிலநடுக்கங்களில் இதுவரைக்கும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.  நேபாள நாட்டின் மேற்கே  நேற்று இரவு 9.07 மணி அளவில்  6.7 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  அதைத் தொடர்ந்து இரவு 9:56 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான இன்னொரு நிலநடுக்கம் உணரப்பட்டது.   அதன் பின்னர் இன்று அதிகாலை 2. 12 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.   இது 6.6 ரிக்டர் ஆக பதிவாகி இருக்கிறது. 

w

 இந்த நிலநடுக்கங்களில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்து உள்ளனர்.  இந்தியாவின் புது டெல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. 

q
 
 டெல்லி நொய்டா மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.  உத்தரகாண்ட்  பகுதியில் நில அதிர்வு ரிக்டர் 4 அளவில் பதிவாகி இருக்கிறது. 

வடமாநிலங்கள், தலைநகர் டெல்லியில்  நள்ளிரவில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்திருக்கின்றனர்.   பத்து நொடிக்கும்  அதிகமாக இந்த நிலநடுக்கம்  ஏற்பட்டதாக பலரும் கருத்து  தெரிவித்து வருகின்றனர். 

ww

நில நடுக்கத்தால் பலரும் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே வந்து பீதியுடன்  நின்று இருக்கிறார்கள். அந்த திக் திக் அனுபவங்களை பலரும்  சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றார்கள்.