டெல்லியில் கட்டிட விபத்தில் சிக்கி 2 பேர் படுகாயம்!!

 
ttn

டெல்லியில் கட்டிடம் இடிந்து  ஏற்பட்ட விபத்தில்  2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
 

tn

தலைநகர் டெல்லியில் உள்ள ஆசாத் மார்க்கெட் பகுதியில் இன்று காலை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. பயங்கர சத்தத்துடன் கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில் உடனடியாக இது குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் கட்டிட ஈடுபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா? என்று சோதனையிட்டனர்.

tn

இதில் 2பேர் படுகாயம் அடைந்த நிலையில் மேலும் 5 பேர் சிக்கி உள்ளது தெரிய வந்துள்ளது . தற்போது மீட்பு பணியானது அப்பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இருப்பினும் கட்டிட விபத்தில் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு தொழிலாளர்கள்  அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

tn

இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் கூறும்போது , காலை 8.30 மணியளவில் சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது என்றும் நான்கு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இதற்கிடையில், உள்ளூர் போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் தீயணைப்பு அதிகாரிகளுக்கு உதவியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.