கொடூர கொலையாளி அப்தாப் - இன்று உண்மை கண்டறியும் சோதனை

 
அப்

காதலியை  கொன்று 32 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்து ப்ளீச்சிங் பவுடரில் ஊற வைத்து அப்புறப்படுத்திய கொடூர கொலையாளி அப்தாப்பிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது .  

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஷ்ரத்தா.  இவரது காதலன் அப்தாப்.  டெல்லியில் இருவரும் லிவ் இன் உறவில் வசித்து வந்துள்ளனர் .  இந்த நிலையில் ஷ்ரத்தா தன்னை  திருமணம் செய்து கொள்ளச் சொல்லி  வற்புறுத்தி வந்ததால் அதில் ஆத்திரம் அடைந்து கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.  பின்னர் உடலை 32 துண்டாக வெட்டி ப்ளீச்சிங் பவுடரில் ஊற வைத்து பிரிட்ஜில் வைத்து ஒவ்வொரு நாளும் இரண்டு துண்டுகள் வீதம் 18 தினங்கள் வெளியே எடுத்துச் சென்று அப்புறப்படுத்தி இருக்கிறார்.

ப்

 தன்னை அப்தாப் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசி எறிந்து விடுவார் என்று மராட்டிய மாநில போலீசில் முன்பே புகார் செய்து உள்ளார் ஷ்ரத்தா.  கடந்த 2020 ஆம் ஆண்டில் நவம்பர் 23ஆம் தேதி அன்று அப்தாப் போலீசுக்கு எழுதிய புகார் கடிதத்தில் அப்தாப் என்னை, தொடர்ந்து அடித்து சித்திரவதை செய்து வருகிறார்.  இது அவரின் பெற்றோருக்கும் தெரியும் .  

கொடூர காதலன் அப்தாப்தொடர்ந்து தாக்கி துன்புறுத்தி வந்தும் கொலை செய்து விடுவார் என்ற அச்சம் இருந்தும் ஏன் ஷ்ரத்தா அவரை விட்டு பிரியவில்லை என்பதுதான் போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.