#Breaking: டெல்லியில் தொடர்ந்து 5வது ஆண்டாக பட்டாசு வெடிக்க தடை...

 
பட்டாசு

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து ஐந்தாவது  ஆண்டாக  இந்த ஆண்டும் பட்டாசுகள் விற்கவும்,  வெடிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.   அதிலும் தலைநகர டெல்லி காற்று மாசுவால் திணறி வருகிறது. அங்கு கடந்த சில ஆண்டுகளாகவே காற்றின் தரம் மிக மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது.  இந்தக் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன. இந்தநிலையில் காற்று மாசு கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்கவும்,  விற்பனை செய்யவும்  தடை விதித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார்.  

பட்டாசு

அதன்படி  டெல்லியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசுகள் வெடிக்க தடை அமலில் இருந்து வருகிறது.  அதேபோல தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை சமயத்தில் அனைத்து வகையான பட்டாசுகளையும்  உற்பத்தி செய்யவும்,  சேமித்து வைக்கவும்,  விற்பனை செய்யவும், வெடிக்கவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், டிசம்பர் மாதம் வரை இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.   2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடை அமலில் இருக்கும்..