நடிகர் மகேஷ்பாபுவுக்கு பளார்! மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்

 
km

பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் முகத்தில் பளார் என்று அறைந்துவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்,  அதன்பின்னர் தன் செயலுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

தமிழில் விஜய் மாதிரி தெலுங்கில் பிரபலமான நடிகர் மகேஷ்பாபு.  அவர் ‘சர்காரு வாரி பாடா’என்கிற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படம் வரும் 12ம் தேதி அன்று திரைக்கு வரவிருக்கிறது.  படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

ma

 இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் நடித்தபோது மகேஷ்பாபுவின் முகத்தில் தவறுதலாக அறைந்திருக்கிறார்  கீர்த்தி சுரேஷ்.  பிரபலமான நடிகர் முகத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அடித்ததும் படப்பிடிப்பினர் அதிர்ந்து போயிருக்கிறார்கள். அங்கே பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

 தன் தவறை உணர்ந்த கீர்த்தி சுரேஷ்,  மகேஷ்பாபுவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.  அதனால் ஒன்றும் இல்லை தெரியாமல் செய்தது தானே என்று சொல்லி இருக்கிறார்.  ஆனாலும் இத்தனை பிரபல நடிகரின் முகத்தில் கவனமில்லாமல் இப்படி செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வினால், மீண்டும் மீண்டும் சென்று மூன்று முறை மன்னிப்பு கேட்டிருக்கிறார் கீர்த்தி.

ஆனால் இதை பெரிதுபடுத்தாத மகேஷ்பாபு,  அதெல்லாம் ஒன்றும் இல்லை.  அதற்காக அலட்டிக் கொள்ள வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.  அதன் பின்னர்தான் படப்பிடிப்பில் பதட்டம் குறைந்து இருக்கிறது.