கொரோனாவால் இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது!

 
born baby

இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும், கொரோனா பாதிப்பினால்  5.23 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளதாகவும் சிஆர்எஸ் ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது.

New Year's Day: India welcomes 67,000 babies, world's most, on January 1 |  India News - Times of India

இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு குறித்த பதிவுகளை வழங்கும் "சிவில் ரெஜிஸ்ட்ரேசன் சிஸ்டம்" 2020ம் ஆண்டுக்கான அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில், 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2020ம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 5.98 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால் 2018,2019ம் ஆண்டு அறிக்கையுடன் ஒப்பிட்டும் போது பிறப்பு விகிதம் அதிகரித்து உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதேபோல் இறப்பு விகிதம் என்பதும் கணிசமாக அதிகரித்து உள்ளது. அதாவது 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020ம் ஆண்டில்  4.75 லட்சம் இறப்புகள் அதிகரித்து உள்ளதாக சிஆர்எஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இதுவே 2018ம் ஆண்டில் இறப்பு விகிதம் 4.87 லட்சமாகவும், 2019ம் ஆண்டில் 6.90 லட்சமாகவும் உள்ளது. 

இதேபோல்,கொரோனா பெறுந்தொற்று நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக 5.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதன்படி 2020ம் ஆண்டில் 1,48,994 இறப்புகளும், 2021ம் ஆண்டில் 3,32,492 இறப்புகளும் மற்றும் 2022ம் ஆண்ட 42,207 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மொத்தமாக 2020-2022 வரை இந்தியாவில் 5,23,693 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்து உள்ளனர்.