விபத்து ஏற்படுத்தியதற்காக இழப்பீடு கேட்ட ஓட்டுநரை பைக்கில் தரதரவென இழுத்து சென்ற இளைஞர்

 
accident

பெங்களூரு நகரில் நான்கு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற இளைஞன், வாகனத்தை நிறுத்த முயற்சித்த நபரை சாலையில் இழுத்து செல்லும் பரபரப்பு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Bengaluru Horror: Youth on Two-Wheeler Drags Elderly Man on Magadi Road for  One Kilometre (Disturbing Video) | 📰 LatestLY

பெங்களூரு நகரில் இன்று மதியம் ஹொசஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாஹில் என்ற 25 வயது இளைஞர், இருசக்கர வாகனத்தில் சாலையின் மிக வேகமாக சென்று பொலீரோ கார் மீது மோதியுள்ளான். அப்போது இருசக்கர வாகனம் மற்றும் பொலீரோ கார் இரண்டும் கடுமையான சேதம் அடைந்துள்ளது. பொலீரோ வாகனத்தில் இருந்த முத்தப்பா என்ற ஓட்டுநர் இளைஞனிடம் காரில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு தொகை வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்க மறுத்த சாஹில் அங்கிருந்து தப்பித்து செல்ல முயற்சித்துள்ளான். அப்போது இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முத்தப்பா முயற்சித்தபோது வாகனத்தின் பின்னால் சிக்கிக் கொண்டுள்ளார். 

இருசக்கர வாகனத்தை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தவாறு இருந்த முத்தப்பாவை சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் தரதர என இழுத்துச் சென்றுள்ளான். சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தனது வாகனத்தை வேகமாக இரு சக்கர வாகனத்தின் செலுத்தி தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து பொதுமக்கள் சாஹிலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கோவிந்த் ராஜ் நகர் போலீசார் சாஹிலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த கார் ஓட்டுநருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.