பீகாரில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது.. பா.ஜ.க. விரும்பவில்லை- தேஜஸ்வி யாதவ் தகவல்

 
பா.ஜ.க.

பீகாரில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது. இந்த கணக்கெடுப்பை பா.ஜ.க. விரும்பவில்லை என்று அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார்.

பீகாரில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு எதிர்வரும் மே மாதத்துக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயல்முறைக்கு சுமார் ரூ.500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீகாரில் நடைபெறும் ஜாதிவாரி கணக்கெடுப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் வளர்ச்சிக்காக அரசு பாடுபட இது உதவும். 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

எந்தெந்த பகுதிகளில் வளர்ச்சி தேவை என்பதை அறிய இது உதவும். இது தேசிய அளவில் நடத்தப்பட வேண்டும். இந்த கணக்கெடுப்பு பணிகள் முடிந்ததும், இறுதி அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும். இந்த பயிற்சியானது (சாதி வாரி கணக்கெடுப்பு) அடிப்படையில் சாதி ஆதார் கணனா ஆகும். ஒவ்வொரு மதமும் மற்றும் சாதியைச் சேர்ந்தவர்களும் பயிற்சியின் போது சேர்க்கப்படுவார்கள். சாதி வாரியான தலைமை கணக்கெடுப்பை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவ்

பீகார் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், பீகாரில் இன்று (நேற்று) முதல் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும். அது அறிவியில் பூர்வமான தகவல்களை தரும். அதற்கேற்ப பட்ஜெட் மற்றும் சமூக நலத் திட்டங்களை உருவாக்க முடியும். பா.ஜ.க. ஏழைகளுக்கு எதிரானது. இதை (சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு)  நடத்துவதை அவர்கள் விரும்பவில்லை என தெரிவித்தார்.