தெலங்கானா உருவாக போராடிய உங்களை மக்கள் ஒரு போதும் கைவிட மாட்டார்கள்... ராவுக்கு நம்பிக்கை அளித்த நிதிஷ் குமார்

 
கே.சந்திரசேகர் ராவ்

தெலங்கானா உருவாவதற்கு ஒரே மனதாக போராடிய உங்களை மக்கள் ஒரு போதும் கைவிட மாட்டார்கள் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நம்பிக்கை அளித்தார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நேற்று பீகார் சென்றார். பாட்னாவில் முதல்வர் நிதிஷ் குமாரும், கே.சந்திரசேகர் ராவும் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில் கூறியதாவது: உங்கள் (கே.சந்திரசேகரர் ராவ்) எதிரிகள் (பா.ஜ.க.) உங்களுக்கு எதிராக நிறைய பேசுகிறார்கள். நீங்கள் என்ன திறமையால் ஆனீர்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. 

பா.ஜ.க.

இறந்த ராணுவ வீரர்களுக்கு கருணைத்தொகை வழங்கும் உங்கள் (சந்திரசேகர் ராவ்) செய்கை முன்னுதாரணமானது. அவர்கள் உங்கள் மாநிலத்தில்இறக்கவில்லை, தொலைதூர இடத்தில் இறந்தார்கள். இது உண்மையில் மகத்துவமானது. தெலங்கானா உருவாவதற்கு ஒரே மனதாக போராடியவர் நீங்கள். மக்கள் உங்களை ஒரு போதும் கைவிட மாட்டார்கள். பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரிய தனது கோரிக்கையை நரேந்திர மோடி அரசாங்கம் ஏற்க மறுப்பது வேதனையளிக்கிறது. 

சந்திரசேகர் ராவ்-நிதிஷ் குமார்

சிறப்பு அந்தஸ்து எங்களுக்கு வேகமாக வளர்ச்சிடைய உதவியிருக்கும். நான் இப்போது அவர்களை (பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம்) விட்டு விட்டேன். அடல் ஜி மற்றவர்களை மரியாதையுடன் வழிநடத்தும் பழைய காலம் வேறுபட்டது. இப்போது வேலை இல்லை, பிரச்சாரம் மற்றும் பரப்புதல் மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், ஹைதராபாத்தில் தீ விபத்தில் இறந்த பீகாரை சேர்ந்த 12 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். கல்வான் பள்ளதாக்கில் சீன ராணுவ வீரர்களின் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்துக்கும் சந்திரசேகர் ராவ் கருணை தொகை  வழங்கினார்.