பிரதமர் மோடி திறந்து வைத்த பந்தல்கண்ட் சாலையில் பெரிய பள்ளம்

 
road

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் சித்ரகூடத்தில் இருந்து டில்லியை இணைக்கும் வகையில் வகையில் 14,850 கோடி ரூபாய் மதிப்பில் 296 கிலோ மீட்டர் தூரத்துக்கு பந்தல்கண்ட் நன்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வந்தது. இந்த சாலையின் பணிகள் 28 மாதங்களில் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று அதன் திறப்பு விழா கடந்த 16ம் தேதி ஜலான் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு இந்த சாலையை நாட்டுக்கு அற்பணித்தார். இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் இருந்து டில்லி, அரியானா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேர குறைவில் சென்றடைய இந்த புதிய விரைவுச்சாலை உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 

pm modi in up

இந்நிலையில் நேற்று இங்குள்ள சீலம்பூர் என்ற பகுதியில் சாலையில் குறுக்கே பெரிய பள்ளம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அப்பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளதாக உத்தரபிரதேச மாநில விரைவுச்சாலை மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.