5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது!

 
tn

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியுள்ள நிலையில்  ஏலத்தில் ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கிறது.

tn

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொழில்நுட்பத் துறையின் புரட்சிகரமாக ஒன்றாக கருதப்படும் 5ஜி அலைக்கற்றை ஏலம்  இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  20 ஆண்டுகளுக்கு 73 ஜிகாஹெட்ஸ் அலைக்கற்றை  ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் ஜியோ ,ஏர்டெல் ,வோடபோன் ,ஐடியா ,அதானி டேட்டா ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.  அதிகபட்சமாக 14 பில்லியன் டாலர் வரை ஏலத்தொகை கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

tn
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் ஏலத்துக்கு  முன்னர் வசூலிக்கப்படும் வைப்புத் தொகையான ஃப்ரீ ஆக்சன் டெபாசிட்டை மிக அதிகமான அளவில் செலுத்தியுள்ளது. இதனால் நிறுவனம் பெருந்தொகையை ஏலத்தில் குறிப்பிடும் என்று சொல்லப்படுகிறது.  அதை போல்  ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை அதானி முந்தியுள்ளார். 5ஜி சேவை அமலுக்கு வந்தால் இந்திய பொருளாதாரத்தில் கூடுதலாக 45 ஆயிரம் கோடி டாலர் புழக்கத்தில் இருக்கும் என்றும் 2030க்குள் 6ஜி தொழில்நுட்பதற்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.