தாய்மொழியை மறப்பது பேராபத்து, ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் ஏன் துடிக்கிறார்கள்?.. கவர்னர்

 
பகத் சிங் கோஷ்யாரி

நம் தாய்மொழியை மறப்பது பேராபத்து, தாய் மொழியில் படித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகலாம் என்றால் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் ஏன் துடிக்கிறார்கள்? என்று மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கேள்வி எழுப்பினார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த மராத்தி மொழியின் 2 ஆயிரம் ஆண்டு கால பயணத்தை சித்தரிக்கும் நாடகத்தின் திரையிடல் நிகழ்ச்சியில் அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசுகையில் கூறியதாவது: நம் தாய்மொழியை மறப்பது பேராபத்து. ஆரம்ப ஆண்டுகளில் உள்ள குழந்தைகள் தங்கள் பள்ளிப்படிப்பை பிராந்திய மொழிகளில் கற்க வேண்டும். நான் சந்தித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர் தனது ஆரம்ப பள்ளி படிப்பை தாய் மொழியில் கற்றவர். தாய் மொழியில் படித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகலாம் என்றால், ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் ஏன் துடிக்கிறார்கள்?. 

சரத் பவார்

நான் 6ம் வகுப்பு முதல் ஆங்கிலம் படித்தேன். சரத் பவார் 7ம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்றார். வெளிநாட்டு பிரமுகர்களுடன் நாம் ஆங்கிலத்தில் பேசலாம். உண்மையில் ஒரு முறை நான் ஒரு பல்கலைக்கழகத்துக்கு சென்றிருந்தேன். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மராத்தி ஆனால் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் மராத்தி தெரியுமா என்று கேட்டேன். சாந்த் ஞானேஷ்வர், துளசி தாஸ், ராம்தாஸ் ஆகியோரின் புத்தகங்களை படித்துள்ளேன். இவர்கள் அனைவரும் எளிய மொழியில் மக்களுக்கு புரியும் வகையில் போதனைகளை வழங்க முயன்றனர். 

மோடி

கடந்த காலத்தை நினைவில் வைத்து நிகழ்காலத்தில் வாழ்வது நல்லது. மராத்திய பற்றிய விழிப்புணர்வை பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஊக்குவிக்க அரசை வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடந்த திங்கட்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் உத்ரகாண்ட் முதல்வரான பகத்சிங் கோஷ்யாரி தனது எஞ்சிய காலத்தை வாசிப்பு, எழுதுதல் மற்றும்  பிற செயல்பாடுகளில் செலவிட விரும்புவதாக தெரிவித்தார்.