பாரத் ஜடோ யாத்திரையில் கேஜிஎப் பாடல்- கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 
பாரத் ஜடோ

கேஜிஎப் படத்தின் பாடலை அனுமதி இன்றி பாரத் ஜோடோ யாத்திரையில் பயன்படுத்திய காரணத்தினால் காங்கிரஸ் கட்சி மற்றும் பாரத் ஜோடோ சமூக வலை பக்கங்களை முடக்க உத்தரவிட்ட பெங்களூரு கீழவை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

M. K. Stalin who started Rahul Gandhi's Bharat Jado Yatra | குமரியில்  ராகுல் காந்தி தொடங்கிய யாத்ரா; கட்டியணைத்து வாழ்த்திய ஸ்டாலின் | News in  Tamil

காங்கிரஸ் கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அபிசேக் சிங்வி சர்ச்சைக்குரிய குறிப்பிட்ட பதிவுகளை காங்கிரஸ் கட்சி தங்களது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்க தயாராக உள்ளதாகவும் பதிவுகள் நீக்கப்பட்ட பிறகு சாட்சியங்களுடன் நாளை நீதிமன்றத்தில் அதை சமர்ப்பிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்து வாதிட்டார்.தாங்கள் பதிவுகளை நீக்க ஒப்புக்கொண்ட பிறகும் கட்சியின் சமூக வலைத்தள பக்கங்களை முடக்கினால் அது கருத்து உரிமை சுதந்திரத்தை பறிக்கும் செயலாக இருக்கும் எனவும் அவர் வாதிட்டார்.

சிங்வி வாதத்தை ஏற்றுகொண்ட நீதியரசர்கள் நரேந்தர் மற்றும் தேசாய் ஆகியோர் நாளைக்குள் குறிப்பிட்ட பதிவுகள் நீக்கப்பட்டு அதன் சாட்சியங்களை நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு தற்காலிகமாக காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களை முடக்குவதற்காக கீழமை நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு தடை வழங்கி உத்தரவிட்டனர்.