பெங்களூருவில் சாலையின் நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளம்! மெட்ரோ பணியால் விபரீதம்

 
road

பெங்களூரு நகரில் திடீரென சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Bengaluru: Road Caves in Due to Metro Construction Work in Ashok Nagar (See  Pics) | 📰 LatestLY

பெங்களூரு நகரில் பிரிகேட் சாலையின் நடுவே, இன்று மதியம் திடீரென  சுமார் 5 அடி ஆழம் கொண்ட பள்ளம் ஏற்பட்டது. சாலையின் கீழ் பகுதியில் மெட்ரோ சுரங்க பாதை அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் காயம் அடைந்தார். 

இந்த சாலை போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதி என்பதால் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் நாகவாரா என்ற பகுதியில் மெட்ரோ விரிவாக்க பணியில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து தாய் மற்றும் 3 வயது மகன் உயிரிழந்த பரபரப்பு அடங்கும் முன் மீண்டும் மெட்ரோ பணி நடைபெறும் பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.