கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று!!

 
basavaraj bommai

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tn

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை தொடர்ந்து தனது டெல்லி பயணத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் ரத்து செய்துள்ளார். 

tn

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போதைய தனது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பசவராஜ் பொம்மைக்கு கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமானது குறிப்பிடத்தக்கது.