ஆசிரியர் கண்டித்ததால் 10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

 
suicide

பெங்களூருவில் ஆசிரியர்கள் கண்டித்ததால் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பத்தாம் வகுப்பு மாணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Girl From Bengaluru Committed Suicide After Not Being Able To Give Exam

பெங்களூரு நகரில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவன் மோஹின். பள்ளியில் பிட் அடித்து தேர்வில் ஆசிரியர்களிடம் மாட்டிக் கொண்டதாக தெரிகிறது. ஆசிரியர்கள் மோஹினுக்கு கடுமையான தண்டனை கொடுத்த நிலையில், நேற்று மாலை வீட்டிற்கு திரும்பிய போது வீட்டிற்கு செல்லும் வழியில் நாகவாரா என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் 14 வது மாடிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது கீழே விழாமல் மாடியில் உள்ள சுவற்றில் சிக்கிக் கொண்டு அவன் தொங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரை காப்பாற்ற அங்குள்ளவர்கள் சென்றனர். உடனடியாக தனது கையை சுவற்றில் இருந்து விடுவித்து கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பின் மாடிக்கு மோஹின் எவ்வாறு சென்றான் என்பது தெரியவில்லை. இந்த தற்கொலை குறித்து சம்பிகே ஹள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.