லவ் ஜிகாத்துக்கு எதிர்ப்பு; காதலர்களை தாக்கிய இந்து அமைப்பினர்

 
love

கலப்புத் திருமணம் செய்ய பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற காதல் ஜோடிகளை பஜ்ரங்தள் அமைப்பினர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

lover

கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு நகரில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த இளைஞன், தனது இந்து மதத்தை சேர்ந்த காதலியை திருமணம் செய்து கொள்ள இருவர் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் நேற்று காதல் ஜோடி கலப்புத் திருமணம் செய்து கொள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த பஜ்ரங்கள் அமைப்பை சேர்ந்த 4 பேர் திருமணத்தை தடுத்து நிறுத்தி காதல் ஜோடியை கடுமையாக தாக்கி பின்பு லவ் ஜிகாத் நடப்பதை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். 

இந்த தாக்குதல் குறித்து தகவல் தெரிந்த காவல்துறையினர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று காதலனை சிக்மங்களூர் புறநகர் காவல் நிலையத்திற்கும் காதலியை பெண் காவல் நிலையத்திற்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்திய பஜ்ரங்கள் அமைப்பினர்களையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி போது காதல் ஜோடியை பிரிக்க வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையை வலியுறுத்தினர். காவல்துறை அதிகாரிகள் காதல் ஜோடியின் பெற்றோர்களை அழைத்து விசாரித்த போது இருவரும் அருகில் உள்ள கிராமத்தில் டீ தோட்டத்தில் கூலி வேலை செய்து வருபவர்கள் என்றும் 18 வயது நிரம்பியவர்கள் அவர்கள் சொந்த விருப்பத்தின் படி திருமணம் செய்து கொள்ள வந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. 

lover

காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது இளைஞனின் தாய் காவல் நிலையத்தில் வெளியே நின்று கொண்டு தனது மகனை விட்டு விடுங்கள் என கதறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு திருமணத்தை தடுத்து நிறுத்தி காதல் ஜோடி மீது தாக்குதல் நடத்திய பஜ்ரங்கள் அமைப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் தாக்கல் நடத்திய 4 பஜ்ரங்தள் அமைப்பினர்களையும் காவல் நிலையத்திலேயே ஜாமீன் வழங்கி விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து காவல் துறை பாதுகாப்புடன் காதல் ஜோடிக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைப்படி திருமணம் நடக்க உள்ளது.