மோடி, சாவர்க்கர் உருவங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டும்.. பா.ஜ.க.வின் ராம் கதம் வலியுறுத்தல்

 
ராம் கதம்

மோடி, சாவர்க்கர், அம்பேத்கர் மற்றும் சிவாஜி மகராஜ் ஆகியோரின் உருவங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டும் என்று ராம் கதம் பா.ஜ.க.வின் ராம் கதம் வலியுறுத்தியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இந்திய பொருளாதாரத்தை தெய்வங்கள் ஆசீர்வாதத்துடன் மீட்டு சரியான பாதையில் கொண்டு வருவதற்கு, ரூபாய் நோட்டுகளில் ஒரு புறம் மகாத்மா காந்தியின் உருவமும், மறு புறம் விநாயகர்-லெட்சுமி தேவி உருவங்களை அச்சிட வேண்டும் என்று மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என தெரிவித்தார். 

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆலோசனையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. கெஜ்ரிவால் தற்போது தான் ஒரு இந்து என்று காட்டுகிறார் என பா.ஜ.க. குற்றம் சாட்டியது. இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ராம் கதம், ரூபாய் நோட்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி, சத்ரபதி சிவாஜி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் ஸ்வதந்த்ரியவீர் சாவர்க்கர் ஆகியோரின் உருவங்களை அச்சிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ராம் கதம் பதிவேற்றம் செய்து இருநத ரூபாய் நொட்டு டிசைன்

பா.ஜ.க.வின் ராம் கதம் டிவிட்டரில், ரூபாய் நோட்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி, சத்ரபதி சிவாஜி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் ஸ்வதந்த்ரியவீர் சாவர்க்கர் ஆகியோரின் படங்களை அச்சிட்டு அதே ஷேர் செய்து இருந்தார். மேலும் அந்த டிவிட்டில், அகண்ட பாரதம், நயா பாரத், மகான் பாரத், ஜெய் ஸ்ரீராம், ஜெய் மாதா தி என பதிவு செய்து இருந்தார். மேலும் ராம் கதம், ஆம் ஆத்மியின் கோரிக்கைகள் உண்மையாக இருந்தால் நாடு ஏற்றுக் கொண்டிருக்கும். ஆனால் அவர்கள் நமது தெய்வங்களை  தேர்தல் நேரத்தில் மட்டுமே நினைவுகூருகிறார்கள். சிவாஜி மகராஜ், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் சாவர்க்கர் ஆகியோரின் படங்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது என தெரிவித்தார்.