ஆடை விவகாரம்.. பிக்பாஸ் புகழ் உர்பி ஜாவேத்துக்கு எதிராக களம் இறங்கிய மகாராஷ்டிரா பா.ஜ.க. பெண் தலைவர்

 
உர்பி ஜாவேத்

பொது இடங்களில் உடலை காட்டும் அணியும் உர்பி ஜாவேத்துக்கு எதிராக மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா பா.ஜ.க. பெண் தலைவர் ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.

இந்தி பிக்பாஸ் புகழ் உர்பி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக மிகவும் பிரபலமானவர். அதேசமயம் அவர் பேஷன் என்று அணியும் ஆடைகள் சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. அந்த ஆடைகள் அதிக கவர்ச்சியை வெளிப்படுத்துவதாக இருப்பதை அதற்கு காரணம். இருப்பினும் உர்பி ஜாவேத் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தான் நினைத்தப்படி மற்றும் தனது விருப்பப்படி தொடர்ந்து ஆடைகளை அணிந்து வருகிறார். தற்போது ஆடை விவகாரத்தில் உர்பி ஜாவேத்தை பா.ஜ.க.வின் பெண் தலைவர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 சித்ரா வாக்

 ஆடை  விவகாரத்தில் உர்பி ஜாவேத்தை விமர்சனம் செய்து மகாராஷ்டிரா பா.ஜ.க.வின் மகளிர் பிரிவு தலைவர் சித்ரா வாக் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சித்ராவாக் கூறியிருப்பதாவது:  சில கொடூரமான செயல்களை சோதனைகளை சந்தித்த ஒரு ஒன்பது வயது சிறுமியின் தாய் என்னை சந்தித்தார். உர்பி ஜாவேத்துக்கு எதிராக குரல் எழுப்பும்படி அந்த தாய் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.

டி.வி. நடிகை சாஹத் கன்னா

இது சத்ரபதி சிவாஜி மகாராஜின் நிலம், மகாராஷ்டிராவின் கலாச்சாரம் உர்பி ஜாவேத் மூலம் நிர்வாணத்தை காட்ட அனுமதிப்பதில்லை. உர்பி ஜாவேத்துக்கு எதிராக மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அண்மையில் உர்பி ஜாவேத், தனது ஆடை தேர்வு குறித்து பேசிய டி.வி. நடிகை சாஹத் கன்னாவுடன் பகிரங்கமாக சண்டையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.