வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் - காவல் உதவி ஆணையர் மீது கடும் தாக்குதல்!!

 
tn

கொல்கத்தாவில் பாஜக நடத்திய  பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வன்முறையில் இறங்கிய பாஜகவினர், காவல் உதவி ஆணையரை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்க அரசை கண்டித்து பாஜக தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்வதாக அறிவித்தது.  இந்த பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.  இதன் காரணமாக அனுமதியின்றி நடத்தப்பட்ட பேரணியை தடுக்கும் வகையில் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். இருப்பினும் தடுப்புகளை மீறி பாஜகவினர் பேரணியை தொடர முயன்றனர். 

ttn

இதன் காரணமாக பாஜகவினருக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  தடுப்புகளை மீற முயன்ற பாஜகவினர் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.  இந்த வன்முறை மோதலில் காவல்துறை வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது.  காவல் உதவி ஆணையர் உட்பட போலீசார் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. வீடியோ ஆதாரங்களை கொண்டு கலவரக்காரர்களை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

tn

ரயில்கள் மூலம் வந்த பாரதிய ஜனதா கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  தடையை மீறி பேரணி சென்ற பாஜக எம்எல்ஏ சுவேந்து  அதிகாரி,  எம்பி லாகிட் சட்டர்ஜி உள்ளிட்டார் தடுப்பு காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.