பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024- ஜுன் வரை நீட்டிப்பு

 
jp nadda

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

natta


டெல்லியில் கடந்த 10 ஆம் தேதி பாஜக பொது செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாஜகவின் செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டன. 

இக்கூட்டத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களை தேர்தல் வெற்றி வியூகங்கள் வகுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. வரும் 20 ஆம் தேதியுடன் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், அவரது பதவிக்காலத்தை 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டித்து பாஜக தலைமை அறிவித்துள்ளது. கடந்த 2020 ஜனவரி மாதம் தேசிய தலைவராக பதவியேற்ற நட்டாவின் தலைமையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது