பாஜகவின் தேசிய தலைவர் பதவிக்காலம் முடிவு- நிர்வாகிகள் அவசர ஆலோசனை

 
BJP Meeting

டெல்லியில் கடந்த 10 ஆம் தேதி பாஜக பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில்,  பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்றும் , நாளையும் நடைபெறுகிறது.

பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவி காலம் வரும் 20 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்நிலையில், டெல்லியில், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது. டெல்லியில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்துக்கு பேரணியாக சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டாவின் பதவி காலத்தை நீட்டிப்பது, அடுத்தடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் வெற்றி வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதில் தமிழகத்தில் இருந்து அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பலவீனமாக உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து வலிமைப்படுத்த வேண்டுமெனவும், ஒரு தொகுதியில் கூட தோல்வியடையக் கூடாது என்றும் நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.