அரசு அதிகாரி கன்னத்தில் பளார் விட்ட பாஜக எம்.பி. - வைரலாகும் வீடியோ

 
mp

பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று அரசு அதிகாரியின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார் பாஜக எம்.பி.   போலீசார் உள்பட அங்கிருந்த அனைவரையும் எம்பியின் செயல் அதிர்ச்சி அடைய   வைத்திருக்கிறது.  இந்த வீடியோ வைரலாகி பார்போர் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சித்ரோகர் எம். பி. ஆக இருப்பவர் சந்திர பிரகாஷ் ஜோசி.  இவர் அப்பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்றிருக்கிறார்.   அப்போது அங்கிருந்த அரசு அதிகாரி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.  

b

 அந்த நேரத்தில் அந்த அதிகாரி ஏதோ அது குறித்து எடுத்துச் சொல்ல , அதில் ஆத்திரம் அடைந்த சந்திர பிரகாஷ் ஜோசி,  திடீரென்று அந்த அரசு அதிகாரியின் கன்னத்தில் ஆவேசமாக ஓங்கி அடிக்கிறார்.

 இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத அந்த அதிகாரி அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.   சுற்றி நின்ற போலீசாகும் மற்ற அரசு அலுவலர்களும் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார்கள்.

 இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி பலரும் எம்பி யின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  அரசு ஊழியரை அலுவலக பணியில் இருக்கும் போது கன்னத்தில் அறைந்த எம்பியின் செயலுக்கு அரசு ஊழியர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.