ஒருவர் சுதந்திரமாக மது அருந்தலாம், புகையில்லை மெல்லலாம் ஆனால் தண்ணீரின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுங்க.. பா.ஜ.க. எம்.பி.

 
 ஜனார்தன் மிஸ்ரா

ஒருவர் சுதந்திரமாக மது அருந்தாலம்,புகையிலை மெல்லலாம் ஆனால் அவர் தண்ணீரின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. ஜனார்தன் மிஸரா தெரிவித்தார்.

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் பா.ஜ.க.வின் ஜனார்தன் மிஸ்ரா. இவர் சமீபகாலமாக தனது அதிரடியான செயல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். அண்மையில், பா.ஜ.க. எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா ஒரு பள்ளிக்கு மரம் நடும் விழாவுக்கு சென்றார். அப்போது, அந்த பள்ளிக்கூடத்தில் உள்ள கழிவறை அசுத்தமாக இருந்ததை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜனார்தன் மிஸ்ரா   தனது கைகளால் கழிவறையை சுத்தம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

கழிவறையை சுத்தம் செய்த  ஜனார்தன் மிஸ்ரா

தற்போது தண்ணீர் சேமிப்பதை வலியுறுத்தி ஜனார்தன் மிஸ்ரா பேசிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரேவா நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற நீர் பாதுகாப்பு பயிலரங்கில் பங்கேற்ற  பா.ஜ.க. எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா பேசுகையில் கூறியதாவது: தொடர்பான நிலங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன, அதை காப்பாற்ற வேண்டும். 

தண்ணீர் !

ஒருவர் சுதந்திரமாக குட்கா (புகையில்லை) மெல்லலாம், மதுபானம் அருந்தலாம், தின்னர் நுகரலாம், சுலேன் (ஒரு வகையான பிசின்) அல்லது அயேடெக்ஸ் சாப்பிடலாம் ஆனால் அவர் தண்ணீரின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். தண்ணீர் வரியை தள்ளுபடி செய்வதாக எந்த அரசாங்கமும் அறிவித்தால், நாங்கள் தண்ணீர் வரி செலுத்துவோம் என்றும், மின் கட்டணம் உள்பட மீதமுள்ள வரிகளை நீங்கள் தள்ளுபடி செய்யுங்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.