கொலை முயற்சி வழக்கு: முகேஷ் அம்பானியை விசாரிக்க மறுப்பு

 
ma

கொலை முயற்சி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானியை சாட்சியாக விசாரிக்க கோரிய மனுவை ஏற்க மறுத்துள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

 பாம்பே டையிங் நிறுவனத்தின் தலைவரான பிரபல தொழிலதிபர் நுஸ்லி வாடியா.    இவரை கடந்த 1989 ஆம் ஆண்டில் கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் யுவான் செக்யூரியா என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.   யுவான் செக்யூரியா அளித்த வாக்கு மூலத்தில் ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் அற்போதைய சிஇஓவான கீர்த்தி அம்பானியின் பெயரை குறிப்பிட்டு இருந்தார்.

b

இதன் பின்னர் இந்த வழக்கை 2003ஆம் ஆண்டு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது மகாராஷ்டிரா அரசு.   வழக்கு விசாரணை நிலுவையில் இருந்த போது கீர்த்தி அம்பானி உயிரிழந்து விட்டார்.   இதை அடுத்து இந்த வழக்கில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியை சாட்சியாக சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என்று மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் எதிர்மனுதாரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.   இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி எஸ். பி. நாயக் நிம்பல்கர்,  முகேஷ் அம்பானியை சாட்சியாக விசாரிக்க முகாந்திரம் இல்லை என்று சொல்லி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.