பாஜக பிரமுகர் படுகொலை - மாவட்டம் முழுவதும் பதற்றம்

 
t

பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது . கர்நாடக மாநிலத்தில் தட்சிண கனடாவை சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு.  முப்பது வயதான இந்த வாலிபர் பாஜகவில் மாவட்ட இளைஞரணி செயற்குழு உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.

 இவர் தனக்கு சொந்தமான இறைச்சி கடைய கடையை நேற்று முன்தினம் இரவு மூடிக்கொண்டிருந்த போது,  முகமூடி அணிந்திருந்த மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்து பிரவீனை கழுத்தில்,  தலையில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி இருக்கிறார்கள்.  படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர்  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

pr

அவரை  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.   இதை அறிந்த பாஜகவினர் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த படுகொலையால் தட்சிண கன்னடா மாவட்ட முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  இதனால் பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.  மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தப்படும் சம்பவங்கள் நடக்கின்றன.  

கடந்த  21ஆம் தேதி பெல்லாரே பகுதியில் இரவில்  மசூத் என்கிற 18 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டார்.  அந்த கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.