தீவிரவாத அமைப்புகளுடன் இமாம், மத தலைவர்களுக்கு தொடர்பு.. மதரஸாவை இடித்து தரைமட்டமாக்கிய அசாம் அரசு

 
மதரஸா இடிப்பு

அசாமில் மதரஸாவின் இமாம் மற்றும் மத தலைவர்கள் தீவிரவாத அமைப்புகளுடான தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்டதையடுத்து தொடர்ந்து  அந்த மதரஸாவை அசாம் நிர்வாகம் இடித்தது.


அசாமில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தீவிரவாத தொடர்புகளுடன் சட்ட விரோத இஸ்லாமிய மதரஸாகளுக்கு எதிரான நடவடிக்கையை ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு கடுமையாக அதேசமயம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.  போங்கைகான் மாவட்டத்தில் உள்ள கபைடரி பகுதி-4 கிராமத்தில் அமைந்துள்ள மர்கசுல் மா ஆரிப் குவாரியான மதரஸாவை 2 புல்டோசர்கள்  இடித்து தள்ளப்பட்டது.

ஹிமந்தா பிஸ்வா சர்மா

தீவிரவாத அமைப்புகளான அல் கொய்தா இந்திய துணை கண்டம் மற்றும் அன்சருல்லா பங்களா குழுவுடன் தொடர்புடைய இமாம் மற்றும் மதரஸா ஆசிரியர்கள் உள்பட 37 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மர்கசுல் மா ஆரிப் குவாரியான மதரஸாவை அசாம் நிர்வாகம் இடித்தது. அசாம் அரசாங்கத்தால் இடிக்கப்பட்ட மூன்றாவது மதரஸா இதுவாகும். எஸ்.பி. ஸ்வப்னனீஸ் தேகா கூறுகையில், மதரஸா கட்டிடங்கள் ஏ.பி.டபுள்யூ.டி. விவரப்குறிப்புகள்/ஐ.எஸ். விதிமுறைகளின் கட்டப்படாதால், மதரஸா கட்டமைப்பு ரீதியாக பாதிக்கப்படக்கூடியதாகவும்,  மனிதர்கள் வசிப்பதற்கு பாதுகாப்பற்றதாகவும் உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவில் கூறியுள்ளது.

திகந்தா கலிதா

கடந்த சில தினங்களுக்கு முன் அசாம் பா.ஜ.க. எம்.எல்.ஏ. திகந்தா கலிதா பேசுகையில், மாநிலத்தின் சில தொலைதூரப் பகுதிகளில் சில அங்கீகரிக்கப்படாத மற்றும் சந்தேகத்திற்கிடமான  மதரஸாக்கள் நிறுவப்பட்டுள்ளது.  மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத மற்றும் சந்தேகத்திற்கிடமான மதரஸாக்கள் மற்றும் அவற்றின் நிதியுதவியை மாநில அரசு மற்றும் காவல்துறை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். அதற்கு அடுத்த நாளில் மர்கசுல் மா ஆரிப் குவாரியான மதரஸா இடிக்கப்பட்டுள்ளது.