மம்தாவுக்கு என்ன மேஜிக் செய்தீர்கள்?.. துணை குடியரசு தலைவரிடம் ஜாலியாக கேள்வி கேட்ட அசோக் கெலாட்

 
மம்தா பானர்ஜி

துணை குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்காமல் இருக்க, மம்தா பானர்ஜிக்கு என்ன மேஜிக் செய்தீர்கள்? என்று துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கரிடம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஜாலியாக கேள்வி கேட்டார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கர் பேசுகையில் கூறியதாவது: நான் மம்தாவிடம் சொன்னேன், நான் இனி உங்கள் மாநிலத்தின் கவர்னர் அல்ல. உங்கள் இதயத்தில் கை வைத்து, அரசியலமைப்புக்கு எதிரானது என்னிடம் இருக்கிறதா என்று சிந்தியுங்கள். அவர் (மம்தா பானர்ஜி) என்ன சொன்னாலும் அவரின் கண்ணியத்திற்கு எதிராக ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறேனா?. 

ஜெகதீப் தங்கர்

நான் என்ன செய்தாலும் வெளிப்படையாகவும், எழுத்தாகவும் இருந்தது. இப்போதும், இந்த சபையின் மூலம், முதன்முறையாக அவரது நடவடிக்கைக்கு (துணை குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தது) நன்றி தெரிவிக்கிறேன். (பா.ஜ.க.வின்) வசுந்தரா ராஜே 1989ல் பார்லிமென்ட் பகுதியில் தொடங்கினார். எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. அன்றிலிருந்து அவருடான எனது உறவுகள் தனிப்பட்டவை. மேற்கு வங்க கவர்னராக பிறகு நான் அவரிடம் (வசுந்தரா ராஜே) உதவியும் கேட்டேன் ஏனென்றால் என்னுடைய முதல்வர் மம்தா பானர்ஜி என்பதால். தயவு செய்து ஏதாவது மந்திரம் சொல்லுங்கள் என்று வசுந்தரா ராஜேவிடம் கேட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

வரணும்… காங்கிரஸ் தலைவரா மீண்டும் ராகுல் காந்தி வரணும்… அசோக் கெலாட் கோரிக்கை

முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், (துணை குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்காமல் இருக்க) மம்தா என்ன மேஜிக் செய்தீர்கள்? என்று துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கரிடம் ஜாலியாக கேட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணை குடியரசு தலைவர் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தது. இது அந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜகதீப் தங்கர் வெற்றியை மிகவும் எளிதாக்கியது குறிப்பிடத்தக்கது.